Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கபடி: புனே வெற்றி

கபடி: புனே வெற்றி

கபடி: புனே வெற்றி

கபடி: புனே வெற்றி

ADDED : ஜன 30, 2024 10:08 PM


Google News
Latest Tamil News
பாட்னா: புரோ கபடி லீக் போட்டியில் புனே அணி 60-29 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வென்றது.

இந்தியாவில் புரோ கபடி தொடரின் 10 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. நேற்று பாட்னாவில் நடந்த லீக் போட்டியில் புனேரி பல்தான்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

போட்டி துவங்கிய 8 வது நிமிடத்தில் தெலுங்கு அணி ஆல் அவுட்டானது. அடுத்த 7 நிமிடத்தில் மீண்டும் ஆல் அவுட்டாக, முதல் பாதியில் புனே அணி 29-6 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் புனே அணி புள்ளிகளை குவித்தது. முடிவில் புனே அணி 60-29 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. புனே சார்பில் ஆகாஷ் ஷிண்டே 11, மோகித் 8 புள்ளி எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us