ADDED : செப் 25, 2025 11:06 PM

அரையிறுதியில் செக்குடியரசு
பசே சிட்டி: பிலிப்பைன்சில், உலக வாலிபால் சாம்பியன்ஷிப் 21வது சீசன் நடக்கிறது. இதன் காலிறுதியில் செக்குடியரசு அணி 3-1 (22-25, 27-25, 25-20, 25-21) என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில் போலந்து அணி 3-0 (25-15, 25-22, 25-19) என, துருக்கியை வென்றது.
ஜப்பான் 'ஹாட்ரிக்'
அம்மான்: ஜோர்டானில் நடக்கும் பெண்கள் (16 வயது) ஆசிய கோப்பை கூடைப்பந்து ('டிவிசன்-ஏ') லீக் போட்டியில் ஜப்பான் அணி 76-72 என, நியூசிலாந்தை வீழ்த்தியது. முதலிரண்டு போட்டியில் சிரியா, சீனாவை வென்ற ஜப்பான், 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது.
நியூகேசில் அபாரம்
லண்டன்: இங்கிலீஷ் லீக் கோப்பை கால்பந்து 3வது சுற்று போட்டியில் நியூகேசில் யுனைடெட், பிராட்போர்டு அணிகள் மோதின. இதில் நியூகேசில் அணி 4-1 என வெற்றி பெற்றது. மான்செஸ்டர் சிட்டி அணி 2-0 என, ஹட்டர்ஸ்பீல்டு அணியை வென்றது.
அல்காரஸ் கலக்கல்
டோக்கியோ: ஜப்பான் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அர்ஜென்டினாவின் செபாஸ்டியன் பேஸ் மோதினர். இதில் அல்காரஸ் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
எக்ஸ்டிராஸ்
* ஆசிய யூத் விளையாட்டு (அக். 22-31, பஹ்ரைன்) குத்துச்சண்டை போட்டிக்கான 23 பேர் கொண்ட இந்திய அணியில் துருவ் கார்ப், உத்தம் சிங் ராகவ், குஷி சந்த், அஹானா சர்மா, சந்திரிகா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
* ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் (15, 17 வயது, அக். 21-26, சீனா) தொடருக்கான இந்திய அணியில் தன்வி பத்ரி இடம் பெற்றுள்ளார். இவர், கடந்த ஆண்டு 15 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையரில் தங்கம் வென்றிருந்தார்.
* ஆஸ்திரேலியா சென்றுள்ள ஜூனியர் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கான்பெராவில் இன்று நடக்கிறது.
* பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீராங்கனை லிசா கீட்லி நியமிக்கப்பட்டார்.
* ராஜஸ்தானில், முதன்முறையாக 'டூர் தி தார்' சைக்கிள் பந்தயம் நடக்கவுள்ளது. வரும் நவ. 23ல் துவங்கும் இப்போட்டியில் 300 கி.மீ., ரிலே, 200, 100 கி.மீ., போட்டிகள் நடத்தப்படுகிறது.