Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

Latest Tamil News
பிரேசில் பிரமாதம்

டார்ட்மண்ட்: ஜெர்மனி, நெதர்லாந்தில் பெண்களுக்கான உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 27வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பிரேசில் அணி 32-25 என, தென் கொரியாவை வீழ்த்தியது. நார்வே அணி 39-26 என, சுவீடனை வென்றது. செக்குடியரசு அணி 25-28 என, அங்கோலா அணியிடம் தோல்வியடைந்தது.

லீட்ஸ் அணி வெற்றி

லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பிரிமியர் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் லீட்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தியது. ஆர்சனல் அணி 2-0 என, பிரென்ட்போர்டு அணியை வென்றது. ஆஸ்டன் வில்லா அணி 4-3 என, பிரைட்டன் அணியை தோற்கடித்தது.

எக்ஸ்டிராஸ்

* கோவாவில் நடக்கும் சூப்பர் கோப்பை கால்பந்து தொடருக்கான அரையிறுதியில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

* சிலியில் நடக்கும் பெண்கள் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான லீக் போட்டியில் இன்று இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் நமீபியாவை வீழ்த்திய இந்தியா, 2வது போட்டியில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.

* ஆமதாபாத்தில் நடந்த சையது முஷ்தாக் அலி டிராபி லீக் போட்டியில் நாராயணன் ஜெகதீசன் (83), சாய் கிஷோர் (87*) கைகொடுக்க, தமிழக அணி (204/5) 61 ரன் வித்தியாசத்தில் திரிபுராவை (143/10, 18.5 ஓவர்) வீழ்த்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us