/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/ஐ.டி.எப்., டென்னிஸ்: ஜீல் தேசாய் அபாரம்ஐ.டி.எப்., டென்னிஸ்: ஜீல் தேசாய் அபாரம்
ஐ.டி.எப்., டென்னிஸ்: ஜீல் தேசாய் அபாரம்
ஐ.டி.எப்., டென்னிஸ்: ஜீல் தேசாய் அபாரம்
ஐ.டி.எப்., டென்னிஸ்: ஜீல் தேசாய் அபாரம்
ADDED : செப் 21, 2025 11:06 PM

குருகிராம்: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையரில் இந்தியாவின் ஜீல் தேசாய் சாம்பியன் ஆனார்.
ஹரியானாவின் குருகிராமில், பெண்களுக்கான 'வேர்ல்டு ரேங்கிங்' ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜீல் தேசாய், ஸ்ருதி அஹ்லாவத் மோதினர். இதில் ஜீல் தேசாய் 2-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரவ்யா ஷிவானி, பிரஞ்சலா ஜோடி 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த மஹிகா கண்ணா, சோஹினி மொஹந்தி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.