/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/ராம்குமார் ராமநாதன் வெற்றி: பெங்களூரு ஓபன் டென்னிசில்ராம்குமார் ராமநாதன் வெற்றி: பெங்களூரு ஓபன் டென்னிசில்
ராம்குமார் ராமநாதன் வெற்றி: பெங்களூரு ஓபன் டென்னிசில்
ராம்குமார் ராமநாதன் வெற்றி: பெங்களூரு ஓபன் டென்னிசில்
ராம்குமார் ராமநாதன் வெற்றி: பெங்களூரு ஓபன் டென்னிசில்
ADDED : பிப் 12, 2024 09:37 PM

பெங்களூரு: பெங்களூரு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றார்.
பெங்களூருவில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், பிரான்சின் மேக்சிம் ஜான்வியர் மோதினர். 'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 6-7 என இழந்த ராமநாதன், பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 7-5 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய இவர் 6-4 என தன்வசப்படுத்தினார்.
இரண்டு மணி நேரம், 26 நிமிடம் நீடித்த போட்டியில் ராம்குமார் ராமநாதன் 6-7, 7-5, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.