/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சுட்டுப்பிடித்த ரவுடியின் 2 கூட்டாளிகள் கைது சுட்டுப்பிடித்த ரவுடியின் 2 கூட்டாளிகள் கைது
சுட்டுப்பிடித்த ரவுடியின் 2 கூட்டாளிகள் கைது
சுட்டுப்பிடித்த ரவுடியின் 2 கூட்டாளிகள் கைது
சுட்டுப்பிடித்த ரவுடியின் 2 கூட்டாளிகள் கைது
ADDED : ஜூன் 30, 2024 12:06 AM

மாமல்லபுரம்:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் சத்யா என்ற சீர்காழி சத்யா, 41. அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேக பட்டியலில் இருக்கும் சத்யா, சென்னை, பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த வக்கீல் அலெக்ஸ் சுதாகர், 49, என்பவரின் பிறந்த நாள் விழாவிற்காக, கூட்டாளி இருவருடன், கடந்த 27ம் தேதி இரவு மாமல்லபுரம் வந்தார்.
செங்கல்பட்டு தனிப்படை போலீசார் மற்றும் மாமல்லபுரம் போலீசார், கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று முன்தினம் அதிகாலை 4:30 மணிக்கு, ரவுடி சத்யா வந்த 'ரேஞ்ச் ரோவர்' காரை சுற்றிவளைத்தனர்.
போலீசாரை தாக்கி தப்ப முயன்ற சத்யாவை கைது செய்த போலீசார், வக்கீல் அலெக்ஸ்சையும் கைது செய்தனர். சத்யாவுடன் வந்த அவரது கூட்டாளிகள் இருவர் தப்பி ஓடிவிட்டனர்.
தலைமறைவான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, 43, மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த பால்பாண்டியன், 30, ஆகிய இருவரையும், நேற்று காலை 9:00 மணிக்கு, மாமல்லபுரம் தேவனேரி டீக்கடை அருகே போலீசார் மடக்கிப்பிடித்தனர். இருவரையும் சோழிங்கநல்லுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.