/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 317 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம் 317 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்
317 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்
317 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்
317 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்
ADDED : ஜூன் 15, 2024 10:56 PM
தாம்பரம்:வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு, அதன் உரிமையாளர்கள், அவசியம் உரிமம் பெற வேண்டும் என, தாம்பரம் மாநகராட்சி அறிவுறுத்தியது.
நாய் மற்றும் பூனை ஆகிய செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற, https://tcmcpublichealth.in என்ற புதிய இணையதளத்தையும் அறிமுகப் படுத்தியது.ஜூன், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.
இந்நிலையில், புதிய இணையதளம் வாயிலாக, இதுவரை, 503 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றை சரிபார்த்து, முதற்கட்டமாக, 317 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.