/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கிளாம்பாக்கத்தில் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை 10 பேர் அடங்கிய சிறப்பு குழு அமைப்பு கிளாம்பாக்கத்தில் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை 10 பேர் அடங்கிய சிறப்பு குழு அமைப்பு
கிளாம்பாக்கத்தில் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை 10 பேர் அடங்கிய சிறப்பு குழு அமைப்பு
கிளாம்பாக்கத்தில் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை 10 பேர் அடங்கிய சிறப்பு குழு அமைப்பு
கிளாம்பாக்கத்தில் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை 10 பேர் அடங்கிய சிறப்பு குழு அமைப்பு
ADDED : ஜூன் 14, 2024 12:34 AM

கூடுவாஞ்சேரி:வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், நேற்று காலை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் அருண்ராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் அன்பரசன் கூறியதாவது:
பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை, வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.
பெருங்களத்துாரில் இருந்து கிளாம்பாக்கம் வருவதற்கே, ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது என, மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளை போக்கும் விதமாக, அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த குழு, போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்களை ஆராய்ந்து, அதை எவ்வாறு தீர்ப்பது, மாற்று வழி என்ன என்பது குறித்து அறிக்கை அளிக்கும்.
தேவையான இடங்களில் சிக்னல் அமைப்பது, பேருந்து வழித்தடம் மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும். அடுத்த 10 நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்படும். தவிர, கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
வண்டலுார் முதல் காட்டாங்கொளத்துார் வரை மேம்பாலம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு, சட்டசபை கூட்டத்தொடரில் வெளியாகும்.
அதேபோல், சாலை விரிவாக்கப்பணியின்போது அகற்றப்பட்ட நிழற்குடைகள், எம்.எல்.ஏ., - எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி வாயிலாக மீண்டும் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.