/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கை அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் செங்கை அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள்
செங்கை அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள்
செங்கை அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள்
செங்கை அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள்
ADDED : ஜூன் 28, 2024 01:41 AM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 2,000த்திற்கும் மேற்பட்ட மாணவியர் பயில்கின்றனர். மாணவியர் சேர்க்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப வகுப்பறை கட்டடங்கள் இல்லை.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் இயங்கும் தனியார் கல்வி அறக் கட்டளை, பள்ளிகளுக்கு நன்கொடையாக, வகுப்பறை கட்டடம் கட்டுவதை அறிந்து, கல்வித்துறை வாயிலாக பள்ளி நிர்வாகத்தினர் அணுகினர்.
இதையடுத்து, அறக் கட்டளை நிர்வாகம்,தமிழக அரசின் 'நம்ம ஊரு; நம்ம பள்ளி'திட்டத்தில், 97.20 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு வகுப்பறைகளுடன் கூடுதல் கட்டடம் கட்ட ஒப்புதல் பெற்றது.
நேற்று, பூமிபூஜையுடன்கட்டுமானப் பணிகள்துவக்கப்பட்டன. பேரூராட்சித் தலைவர் யுவராஜ், தலைமையாசிரியை சூரியகலா, பள்ளி மேலாண்மை குழுவினர், அறக்கட்டளை நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.
அதே அறக்கட்டளை நிர்வாகத்தினர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளியில்,68 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு வகுப்பறைகளுடன் கூடுதல் கட்டடம்கட்டவும், பூமிபூஜை யுடன் பணிகளைதுவக்கியது.