/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்கள் புறநகரில் செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்கள் புறநகரில்
செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்கள் புறநகரில்
செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்கள் புறநகரில்
செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்கள் புறநகரில்
ADDED : ஜூன் 14, 2024 12:10 AM
செங்கல்பட்டு:
செங்கை மற்றும் புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட பழக்கடைகள் உள்ளன.
இந்த கடைகளில், தற்போது கோடைக் காலத்தில் மாம்பழ சீசன் துவங்கி உள்ளதால், கோயம்பேடு பழ மார்க்கெட் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு மாந்தோப்புகளில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இங்கு விற்பனை செய்யப்படும் பழங்களில் ரசாயனம் கலந்த பழங்களும், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, பொதுமக்களிடையே புகார் எழுந்துள்ளது.
இந்த மாம்பழங்களை சாப்பிடும்போது, குழந்தைகளுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, புறநகரில் உள்ள கடைகளில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.