/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல்
மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல்
மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல்
மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல்
ADDED : ஜூன் 14, 2024 08:46 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, வரும் 24ம் தேதி நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, வரும் 24ம் தேதி, காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை, செங்கல்பட்டு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.
இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் சலுகை, கல்வி, இட ஒதுக்கீடு, உயர்கல்வி, வேலை வாய்ப்பு, சுயதொழில், போட்டித்தேர்வு, தன்னம்பிக்கை ஊட்டுதல் குறித்து, மாற்றுத்திறனாளி நல அலுவலர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலரால் சிறப்புரை அளிக்கப்பட உள்ளது.
கலெக்டர் அருண்ராஜ் தலைமையுரை ஆற்ற உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர், சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் மற்றும் மாவட்ட தொழில் மேலாளர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ -- மாணவியரும் பங்கேற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.