/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பஞ்சமி நிலங்களை மீட்கக்கோரி கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் பஞ்சமி நிலங்களை மீட்கக்கோரி கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்
பஞ்சமி நிலங்களை மீட்கக்கோரி கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்
பஞ்சமி நிலங்களை மீட்கக்கோரி கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்
பஞ்சமி நிலங்களை மீட்கக்கோரி கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்
ADDED : ஜூன் 13, 2024 12:13 AM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த நெல்வாய்பாளையம் கூட்டுச் சாலையில், பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக்கோரி, நெல்வாய்பாளையம் மற்றும் மாணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த, 70க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறியதாவது:
நெல்வாய்பாளையம் மற்றும் மாணிக்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கு, 1932, 1934, 1942ம் ஆண்டுகளில்பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, 1979ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் நிபந்தனை நிலங்கள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும், மாற்றுசமூகத்தினருக்குதவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு, தற்போது அவர்கள் பயன்படுத்திவருகின்றனர்.
அவ்வாறு, தவறுதலாக மாற்றப்பட்டு உள்ள பட்டாக்களை ரத்து செய்து, நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால், காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, இரு கிராமங்களையும் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர், கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.