/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ உயர்கோபுர மின்விளக்கு பழுது மெல்ரோசாபுரம் சந்திப்பில் இருள் உயர்கோபுர மின்விளக்கு பழுது மெல்ரோசாபுரம் சந்திப்பில் இருள்
உயர்கோபுர மின்விளக்கு பழுது மெல்ரோசாபுரம் சந்திப்பில் இருள்
உயர்கோபுர மின்விளக்கு பழுது மெல்ரோசாபுரம் சந்திப்பில் இருள்
உயர்கோபுர மின்விளக்கு பழுது மெல்ரோசாபுரம் சந்திப்பில் இருள்
ADDED : ஜூன் 29, 2024 01:34 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த மெல்ரோசாபுரம் ஜி.எஸ்.டி., - மருதேரி சாலைசந்திப்பு பகுதியில், தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்த சாலை வழியாக, கருநிலம், கோவிந்தாபுரம், கொண்டங்கி உள்ளிட்ட கிராம மக்கள், சிங்கபெருமாள் கோவில் வந்து செல்கின்றனர்.
அதேபோல, சிங்கபெருமாள் கோவிலைச் சுற்றி யுள்ள கிராம மக்கள், மெல்ரோசாபுரம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர்.
இந்த சாலை சந்திப்பில், மறைமலை நகர் நகராட்சி சார்பில், சில ஆண்டுகளுக்கு முன் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கத்தின் போது, இந்த உயர்கோபுர மின்விளக்கு இடம் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், அதன்பின் இதுவரை மின் இணைப்பு மற்றும் விளக்குகள் முறையாக பொருத்தப்படாததால், இந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, பணி முடிந்து வீட்டிற்குச் செல்லும் பெண்கள், அச்சத்துடன் செல்லும் நிலைஏற்பட்டு உள்ளது.
இந்த பகுதியில், அடிக்கடி மொபைல் போன், செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.
எனவே, எரியாமல் உள்ள உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.