/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வீட்டு வரி, குடிநீர் கட்டணம் 28க்குள் செலுத்த வலியுறுத்தல் வீட்டு வரி, குடிநீர் கட்டணம் 28க்குள் செலுத்த வலியுறுத்தல்
வீட்டு வரி, குடிநீர் கட்டணம் 28க்குள் செலுத்த வலியுறுத்தல்
வீட்டு வரி, குடிநீர் கட்டணம் 28க்குள் செலுத்த வலியுறுத்தல்
வீட்டு வரி, குடிநீர் கட்டணம் 28க்குள் செலுத்த வலியுறுத்தல்
ADDED : மார் 13, 2025 02:03 AM
செங்கல்பட்டு:ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் கட்டணத்தை வரும் 28ம் தேதிக்குள் பொதுமக்கள் செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி அளவில், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டணம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனித தோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த உள்ளாட்சி அமைப்புகளில், வீடுகள் மற்றும் நிறுவன கட்டடங்களுக்கு சொத்து வரி கணக்கிடப்பட்டு, வசூல் செய்யப்படுகிறது.
ஊராட்சிகளில், வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகளை பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து, மாதாந்திர குடிநீர் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
மேற்படி வரி செலுத்துவதற்கு, பொதுமக்கள் வசதிக்காக, தமிழ்நாடு அரசு 'கூகுள் பே' மற்றும் 'போன் பே' என, சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்கள் வரி செலுத்தியவுடன், அதற்கான ரசீது உடனடியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியின் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டு, செலுத்துபவருக்கு அளிக்கப்படும்.
பொதுமக்கள் தாங்கள் செலுத்திய கட்டணத்திற்கான ரசீதை, அவர்களாகவே இணையதளத்தில் பதிவு செய்து, தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை உரிய முறையில், வரும் 28ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகத்தில் செலுத்தலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.