/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருக்கழுக்குன்றம் அரசு பள்ளியில் மாணவியர் சேர்க்கை அதிகரிப்பு திருக்கழுக்குன்றம் அரசு பள்ளியில் மாணவியர் சேர்க்கை அதிகரிப்பு
திருக்கழுக்குன்றம் அரசு பள்ளியில் மாணவியர் சேர்க்கை அதிகரிப்பு
திருக்கழுக்குன்றம் அரசு பள்ளியில் மாணவியர் சேர்க்கை அதிகரிப்பு
திருக்கழுக்குன்றம் அரசு பள்ளியில் மாணவியர் சேர்க்கை அதிகரிப்பு
ADDED : ஜூன் 28, 2024 11:02 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி, 25 ஆண்டுகளாக இயங்குகிறது. திருக்கழுக்குன்றம்மற்றும் சுற்றுப்புற 20 கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவியருக்கு, ஒரே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக, இது செயல்படுகிறது.
அறிவியல், கணிதம், கணினி அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் உள்ள நிலையில், இங்கு சேர மாணவியர் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்பள்ளி, மாவட்டத்தில் அதிக அளவில் மாணவியர் பயிலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாணவியர் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது.
பிளஸ் 2 தேர்வில், 97 சதவீதம் மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.மாவட்ட அளவில், பிளஸ் 2ல் மூன்றாம், எட்டாம் இடங்களை பெற்று சாதனை படைத்தனர்.
அதேபோல், பிளஸ் 1ல்ஒரு மாணவி இரண்டாம் இடம் பெற்றார். தற்போதும், பிளஸ் 1 வகுப்பில், அதிக அளவில் மாணவியர் சேர்ந்து வருகின்றனர்.
இது குறித்து, பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:
இப்பள்ளியில், 2,000த்திற்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். பிளஸ் 1 வகுப்பில், அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேர்த்து, தற்போது வரை, 500 மாணவியர் சேர்ந்துள்ளனர். மேலும், 100 பேர் வரை சேர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.