/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தண்டலம் அம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் தண்டலம் அம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
தண்டலம் அம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
தண்டலம் அம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
தண்டலம் அம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
ADDED : ஜூன் 18, 2024 05:08 AM

திருப்போரூர், : திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், பழமையான பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில், ஆண்டு தோறும் ஆடி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான விழா, வரும் ஆடி மாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த கோவிலுக்கு என்று தனியாக தேர் இல்லை.அதனால், பெரியபாளையத்தம்மன் கோவிலுக்கு புதிதாக தேர் செய்து தேரோட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, பல லட்சம் மதிப்பில், 21 அடி உயரத்தில் புதிய தேர் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
இதையொட்டி, கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள், அரோகரா அரோகரா என கோஷங்களை எழுப்பி, புதிய தேரை வடம் பிடித்து இழுத்தனர்.