/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாடு முட்டி விபரீதம் முதியவர் உயிரிழப்பு மாடு முட்டி விபரீதம் முதியவர் உயிரிழப்பு
மாடு முட்டி விபரீதம் முதியவர் உயிரிழப்பு
மாடு முட்டி விபரீதம் முதியவர் உயிரிழப்பு
மாடு முட்டி விபரீதம் முதியவர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 29, 2024 10:23 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் என்.ஹெச்.,- 1 சேரன் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 81; பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இவர், கடந்த 27ம் தேதி மாலை வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றார். அந்த வழியாக வந்த வெள்ளை நிற காளை மாடு முட்டியது.
இதில் படுகாயமடைந்த கன்னியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியவர், அன்றிரவு 11:30 மணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அதே மாடு, அப்பகுதியில் மேலும் இருவரை முட்டியது. மாட்டின் உரிமையாளர் யார் என தெரியாததால், யார் மீது புகார் அளிப்பது என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மறைமலை நகர் போலீசார் கூறுகையில், 'மாடு முட்டி முதியவர் உயிரிழந்தது தொடர்பாக, இதுவரை எவ்வித புகாரும் மறைமலை நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்படவில்லை' எனக் கூறினர்.