/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சூணாம்பேடில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு; 'முற்றுகை போராட்டம் நடத்துவோம் ' என எச்சரிக்கை சூணாம்பேடில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு; 'முற்றுகை போராட்டம் நடத்துவோம் ' என எச்சரிக்கை
சூணாம்பேடில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு; 'முற்றுகை போராட்டம் நடத்துவோம் ' என எச்சரிக்கை
சூணாம்பேடில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு; 'முற்றுகை போராட்டம் நடத்துவோம் ' என எச்சரிக்கை
சூணாம்பேடில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு; 'முற்றுகை போராட்டம் நடத்துவோம் ' என எச்சரிக்கை
ADDED : ஜூன் 30, 2024 11:08 PM
சூணாம்பேடு : சூணாம்பேடில் சில ஆண்டுகளுக்கு முன், விவசாயிகள் கூட்டுறவு சங்கம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது.
டாஸ்மாக் கடையால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக கூறி, பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 8 ஆண்டுகளுக்கு முன் டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது தொழுப்பேடு சாலையில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க, பணிகள் நடந்து வருகின்றன.
ஆகையால், சூணாம்பேடு பகுதியில் டாஸ்மாக் கடை துவங்கப்பட்டால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
சூணாம்பேடு பஜார் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்ததால், டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.
தற்போது, மீண்டும் தொழுப்பேடு சாலையில், சில நாட்களில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
புதிதாக டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்திற்கு அருகே, கோவில், இரண்டு தனியார் பள்ளிகள், திருமண மண்டபம் உள்ளது.
மேலும், மணப்பாக்கம், அரசூர், வெண்ணந்தல், இல்லீடு உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலையில் டாஸ்மாக் கடை அமைந்தால், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும்.
மேலும், இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால், 'குடி'மகன்களால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து, கடந்த நவ., 2ம் தேதி, உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, சூணாம்பேடு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சூணாம்பேடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால், முற்றுகைப் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.