/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மழைநீர் கால்வாய் பணி சிறுதாமூரில் நிறைவு மழைநீர் கால்வாய் பணி சிறுதாமூரில் நிறைவு
மழைநீர் கால்வாய் பணி சிறுதாமூரில் நிறைவு
மழைநீர் கால்வாய் பணி சிறுதாமூரில் நிறைவு
மழைநீர் கால்வாய் பணி சிறுதாமூரில் நிறைவு
ADDED : ஜூலை 12, 2024 10:53 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம் சிறுதாமூர் ஊராட்சியில், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி முடிவு பெற்று, நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது.
சிறுதாமூர் ஊராட்சியில், மேட்டுத்தெரு பகுதியில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், மேட்டு தெருவின் இருபுறத்திலும், அருந்ததியர் மற்றும் ஆதிதிராவிடர் குடியிருப்புகள் உள்ளன.
மழைக் காலங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல், குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து விடுகின்றன. இதுகுறித்து, அப்பகுதி வாசிகள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தனர்.
இந்நிலையில், 15வது மானிய குழு திட்டத்தின் வாயிலாக, 2023 -- 24ம் ஆண்டில், மழைநீர் வடிகால் அமைக்க, 2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கி, தற்போது நிறைவு பெற்றுள்ளன.