/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ரூ.3,000 கோடி மீட்பு நிலம் அமைச்சர் அன்பரசன் ஆய்வு ரூ.3,000 கோடி மீட்பு நிலம் அமைச்சர் அன்பரசன் ஆய்வு
ரூ.3,000 கோடி மீட்பு நிலம் அமைச்சர் அன்பரசன் ஆய்வு
ரூ.3,000 கோடி மீட்பு நிலம் அமைச்சர் அன்பரசன் ஆய்வு
ரூ.3,000 கோடி மீட்பு நிலம் அமைச்சர் அன்பரசன் ஆய்வு
ADDED : ஜூன் 14, 2024 12:20 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில், தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து, வருவாய்த்துறையினர் மீட்ட, 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நேற்று பார்வையிட்டார்.
புனிததோமையார்மலை, பல்லாவரம் கண்டோன்மென்ட் ஆகிய பகுதிகளில், தனியார் ஆக்கிரமித்திருந்த, 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை, வருவாய்த்துறையினர், கடந்த ஆண்டு மீட்டனர். ஆக்கிரமிப்பு நில ஒப்படைப்பு கோரி, பலர் தொடர்ந்த வழக்குகளின் முடிவில், அரசு நிலத்தை வருவாய்த் துறையினர் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு மீட்ட நிலங்களை, அமைச்சர் அன்பரசன், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகத்துடன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.