Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பெட்ரோலுடன் வந்த முதியவருக்கு உதவித்தொகை விதிமீறிய 'பங்க்'கிற்கு 'சீல்' வைத்த தாசில்தார்

பெட்ரோலுடன் வந்த முதியவருக்கு உதவித்தொகை விதிமீறிய 'பங்க்'கிற்கு 'சீல்' வைத்த தாசில்தார்

பெட்ரோலுடன் வந்த முதியவருக்கு உதவித்தொகை விதிமீறிய 'பங்க்'கிற்கு 'சீல்' வைத்த தாசில்தார்

பெட்ரோலுடன் வந்த முதியவருக்கு உதவித்தொகை விதிமீறிய 'பங்க்'கிற்கு 'சீல்' வைத்த தாசில்தார்

ADDED : ஜூன் 29, 2024 01:56 AM


Google News
Latest Tamil News
குரோம்பேட்டை:குரோம்பேட்டை, ராதா நகர், கிருஷ்ணமாச்சாரி தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மன், 85. இவர், முதியோர் உதவித்தொகை பெற 2023ல் விண்ணப்பித்துள்ளார். அவருக்கு, 2023 ஜூலை 22ம் தேதி, உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை பணம் வரவில்லை.

உதவித்தொகை கேட்டு, பல்லாவரம் தாசில்தார் அலுவலகத்திற்கு நடையாய் நடந்துள்ளார். ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. விரக்தியடைந்த முதியவர், நேற்று முன்தினம் சிலருடன் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம்நடத்தியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று மதியம், சிலருடன் மீண்டும் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று, போராட்டம் நடத்தினார். அப்போது, அங்கு வந்த தாசில்தார் ஆறுமுகம், முதியவரிடம் விசாரித்தார். அதற்கு, உதவித்தொகை வரவில்லை என முதியவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, அதற்கான ஆணை நகலை எடுத்து, முதியவர் நரசிம்மனிடம் தாசில்தார் கொடுத்தார்.

இதற்கிடையில், முதியவர் கையில், அரை லிட்டர் பாட்டிலில் பெட்ரோல் இருந்ததை கவனித்த தாசில்தார் ஆறுமுகம், 'எங்கே பெட்ரோல்வாங்கினீர்கள்; விதி முறையை மீறி, பாட்டிலில் பெட்ரோல் விற்பனை செய்த 'பங்க்' எங்குள்ளது?' என விசாரித்தார்.

இதில், அஸ்தினாபுரம் பிரதான சாலையில் உள்ள 'மெர்குரி ஏஜன்சிஸ்' பாரத் பெட்ரோல் 'பங்க்'கில் வாங்கியதாக முதியவர் கூறினார்.

இதையடுத்து, முதியவ ருடன் அங்கு சென்ற தாசில்தார், விதிமீறி பாட்டிலில் பெட்ரோல் விற்பனை செய்ததற்காக, 'பங்க்'கிற்கு 'சீல்' வைத்தனர்.

தொடர்ந்து, இது தொடர்பாக, சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில், தாசில்தார் ஆறுமுகம் புகார் கொடுத்தார்.

அதில், ஓய்வூதிய உத்தரவு பெற்ற பிறகும், ஓய்வூதிய தொகை வரவில்லை என்று, சிலரின் துாண்டுதலின் பேரில், முதியவர் நரசிம்மன், பெட்ரோல் கேனுடன் வந்து, தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி, பெட்ரோலை ஊற்ற முயற்சி செய்தார்.

எனவே, முதியவர் நரசிம்மன் மீதும், அவரை தற்கொலை செய்துகொள்ள துாண்டிய நபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

சிட்லப்பாக்கம் போலீசார் முதியவர் நரசிம்மனிடம் விசாரணை நடத்தி,அனுப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us