ADDED : ஜூலை 14, 2024 01:05 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த பரனுார் ரயில் நிலையம் அருகில், இரும்பு கொட்டகையில் தங்கி, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மஹிந்திரா சிட்டி பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, இவர்களின் கொட்டகையில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள் இருவர், வடமாநில இளைஞர்களிடமிருந்து, 4,000 ரூபாயை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், பரனுார் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன், 25, அவரது நண்பர் ஒருவரும் என தெரியவந்தது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.