/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் வந்தே பாரத் ரயிலை நிறுத்த வலியுறுத்தல் செங்கையில் வந்தே பாரத் ரயிலை நிறுத்த வலியுறுத்தல்
செங்கையில் வந்தே பாரத் ரயிலை நிறுத்த வலியுறுத்தல்
செங்கையில் வந்தே பாரத் ரயிலை நிறுத்த வலியுறுத்தல்
செங்கையில் வந்தே பாரத் ரயிலை நிறுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூன் 28, 2024 01:43 AM
மாமல்லபுரம்:சென்னை - கன்னியாகுமரி ரயில் பாதை தடத்தில், சென்னையை அடுத்த முக்கிய ரயில் நிலைய சந்திப்பாக, செங்கல்பட்டு விளங்குகிறது.
அதன் சுற்றுப்புறத்தில், மாமல்லபுரம் சுற்றுலா பகுதி, கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாகம், மகேந்திரா வேர்ல்டு சிட்டி தொழில் வளாகம்,மறைமலை நகர் தொழிற்பேட்டை, காஞ்சிபுரம் ஆன்மிக நகரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள்உள்ளன.
தமிழகத்தின் பல மாவட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இப்பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். சொந்த ஊரில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்காக, அடிக்கடி செல்கின்றனர்.
செங்கல்பட்டு ரயில் நிலையம் சென்று, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு, எக்ஸ்பிரஸ் ரயில்களில் செல்கின்றனர்.
அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வதால், பயணியர் எளிதாக சென்று திரும்புகின்றனர். ஆனால், சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மட்டும், செங்கல்பட்டில் நிறுத்தப்படுவதில்லை. இந்த ரயிலை நிறுத்திச் செல்ல, ரயில்வே நிர்வாகத்திடம் பயணியர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை - நாகர்கோவில் இடையே, மற்றொரு வந்தே பாரத் ரயிலும் விரைவில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
செங்கல்பட்டு சுற்றுப்புற பகுதியினர், வந்தே பாரத் ரயிலில் செல்ல, சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதை தவிர்க்க, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், வந்தே பாரத் ரயிலை நிறுத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.