/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ முருங்கை முருகன் கோவிலில் வைகாசி திருவிழா கோலாகலம் முருங்கை முருகன் கோவிலில் வைகாசி திருவிழா கோலாகலம்
முருங்கை முருகன் கோவிலில் வைகாசி திருவிழா கோலாகலம்
முருங்கை முருகன் கோவிலில் வைகாசி திருவிழா கோலாகலம்
முருங்கை முருகன் கோவிலில் வைகாசி திருவிழா கோலாகலம்
ADDED : ஜூன் 06, 2024 06:20 AM

அச்சிறுபாக்கம், : அச்சிறுபாக்கம் அடுத்த முருங்கை ஊராட்சியில் வள்ளி, தெய்வானை உடனுறை பாலசுப்பிரமணியம் சுவாமிக்கு, வைகாசி கார்த்திகை திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
முருங்கை ஊராட்சியில், 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த வள்ளி, தெய்வானை உடனுறை பாலசுப்பிரமணியம் சுவாமி கோவில், குளக்கரையில் அமைந்துள்ளது.
கடந்த 26ல், மங்கல இசையுடன் கொடி ஏற்றுதல், காப்பு அணிவித்தல் நிகழ்ச்சியுடன் கார்த்திகை விழா துவங்கியது.
பின், நேற்று முன்தினம் இரவு, விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கலசம் புறப்பாடு நடந்தது.
நேற்று, விரதமிருந்து, காப்பு அணிந்த பக்தர்கள், சிவன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்த பெண்கள் கோவிலை வந்தடைந்தனர்.
பின், பால் காவடி, பறவை காவடி, பால் குடம் எடுத்தல் மற்றும் அலகு குத்திய பக்தர்கள், அலங்கரிக்கப்பட்ட தேரிலிருந்து வள்ளி, தெய்வானை உடனுறை பாலசுப்பிரமணிய சுவாமியுடன் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.
பின், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தது.
பெண்கள் ஆரத்தி எடுத்து, கற்பூரம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர். இரவு 10:00 மணிக்கு, தெய்வீக பக்தி நாடகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற கிருத்திகை விழாவில், அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின், சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் நடந்தன.
விழாவில், சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள், முடி காணிக்கை செலுத்தியும், காவடிகள் எடுத்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.