/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு
ADDED : ஜூலை 13, 2024 12:44 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு சார் - ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல துறை சார்பில், நேற்று காலை உலக மக்கள் தொகை தினத்தைமுன்னிட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி செவிலியர் மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ரதம்மற்றும் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை செங்கல்பட்டு கலெக்டர்அருண்ராஜ் கொடிய சைத்து துவக்கி வைத்தார். சார் - ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, அரசு மருத்துவமனை வழியாக கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்தாண்டு 7,587 பெண்களுக்கும், 14 ஆண்களுக்கும் நிரந்தர குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 3.3 சதவீதம் பிறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டம் ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.