/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பெரம்பூரில் புதுப்பெண் 15 நாளில் மர்ம மரணம்பெரம்பூரில் புதுப்பெண் 15 நாளில் மர்ம மரணம்
பெரம்பூரில் புதுப்பெண் 15 நாளில் மர்ம மரணம்
பெரம்பூரில் புதுப்பெண் 15 நாளில் மர்ம மரணம்
பெரம்பூரில் புதுப்பெண் 15 நாளில் மர்ம மரணம்
ADDED : பிப் 10, 2024 11:42 PM
ஓட்டேரி:பெரம்பூர், ஜமாலியா பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் மனைவி இந்துஜா, 27. பிரபல தனியார் சாப்ட்வேர் நிறுவன ஊழியர். இவர்களுக்கு திருமணமாக 15 நாட்களே ஆகின்றன. இந்துஜா வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென மயக்கம் அடைந்தார்.
உடனே அவரது கணவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில், இந்துஜாவின் தாய் ஆனந்தி அளித்த புகாரின்படி, ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.