/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 600 கிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு 600 கிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு
600 கிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு
600 கிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு
600 கிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு
ADDED : மே 24, 2025 02:35 AM

மறைமலை நகர்:தாம்பரம் மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கண்ணகி நகர் காவல் நிலையம், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாரால், 2023- ---24 ம் ஆண்டு 65 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 699 கிலோ கஞ்சா பொருள்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நேற்று மாலை பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கழிவுகள் அழிக்கும் நிறுவனத்தில் 699 கிலோ கஞ்சா பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு 70 லட்ச ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
தாம்பரம் மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையர் சத்யசீலன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.