/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் 8வது செவிலியர் மாநாடுஎஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் 8வது செவிலியர் மாநாடு
எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் 8வது செவிலியர் மாநாடு
எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் 8வது செவிலியர் மாநாடு
எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் 8வது செவிலியர் மாநாடு
ADDED : பிப் 11, 2024 11:44 PM

மறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., செவிலியர் கல்லுாரியில், 8வது தேசிய செவிலியர் மாநாடு நடைபெற்றது.
எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை இணை துணைவேந்தர் மாநாட்டை துவக்கி வைத்தார். டீன் நிதின் நாகர்கர் துவக்க உரையாற்றினார்.
தலைமை சிறப்பு விருந்தினராக, வேலுார் சி.எம்.சி., முன்னாள் பேரழிவு மற்றும் அவசர நர்சிங் தலைவர் சாமுவேல் ரவிக்குமார் பங்கேற்றார்.
இந்த மாநாட்டில், இன்றைய செவிலியர்களின் தொழில் வழிகாட்டுதல் மற்றும் சுகாதார வசதிகள் செயல்பாடு, தேசிய அளவில் ஆரோக்கியத்திற்க்கான வளர்ச்சி குறித்தும், சுகாதார பாதுகாப்பு உத்திகள் வடிவமைக்கும் நோக்கம் குறித்தும் விளக்கப்பட்டது.
தொடர்ந்து, மாநாடு விளக்க புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாநிலத்தின் வெவ்வேறு 34 நிறுவனங்களில் இருந்து, 570 செவிலியர்கள், அறிஞர்கள், நர்சிங் மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், எஸ்.ஆர்.எம்., செவிலயர் கல்லுாரி முதல்வர் கன்னியம்மாள், துணை முதல்வர் விஜயலட்சுமி, எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மருத்துவ கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட பேராசியர்கள் பங்கேற்றனர்.