/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/அச்சிறுபாக்கம் இருளர்களுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம்அச்சிறுபாக்கம் இருளர்களுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம்
அச்சிறுபாக்கம் இருளர்களுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம்
அச்சிறுபாக்கம் இருளர்களுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம்
அச்சிறுபாக்கம் இருளர்களுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம்
ADDED : பிப் 01, 2024 10:40 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஆதார் அட்டை இல்லாத இருளர் இன மக்களுக்கு, பி.எம்., ஜன்மன் திட்டத்தின் கீழ் சிறப்பு ஆதார் அட்டை பதிவு முகம், நேற்று நடந்தது.
இந்நிகழ்வை, மதுராந்தகம் வட்டாட்சியர் ராஜேஷ், அச்சிறுபாக்கம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் மோகன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
அச்சிறுபாக்கம் வருவாய் குறுவட்டத்திற்கு உட்பட்ட பெரும்பேர்கண்டிகை, மதுார், விளாங்காடு, கோட்டக் கயப்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் இருளர் இன மக்கள், அச்சிறுபாக்கம் ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலக வளாகத்தில் நடந்த முகாமில், ஆதார் அட்டைக்கு பதிவு செய்து கொண்டனர்.


