/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வரி பாக்கி செலுத்த பேரூராட்சி விழிப்புணர்வுவரி பாக்கி செலுத்த பேரூராட்சி விழிப்புணர்வு
வரி பாக்கி செலுத்த பேரூராட்சி விழிப்புணர்வு
வரி பாக்கி செலுத்த பேரூராட்சி விழிப்புணர்வு
வரி பாக்கி செலுத்த பேரூராட்சி விழிப்புணர்வு
ADDED : பிப் 10, 2024 10:46 PM

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 30,000த்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் வீட்டுவரி, குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை, பேரூராட்சி நிர்வாகம் வசூலிக்கிறது.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான வரி பாக்கியை, வரும் 29ம் தேதிக்குள் செலுத்தி, ரசீது பெற்று கொள்ளுமாறு, பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்காக பேரூராட்சி சார்பில், வாகனங்களில் ஒலிபெருக்கி பொருத்தி, வரியினங்களை செலுத்த வேண்டும் என,விழிப்புணர்வு செய்யப்பட்டது.