/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேலக்கண்டை பயணியர் அவதி நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேலக்கண்டை பயணியர் அவதி
நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேலக்கண்டை பயணியர் அவதி
நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேலக்கண்டை பயணியர் அவதி
நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேலக்கண்டை பயணியர் அவதி
ADDED : மே 14, 2025 06:17 PM
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த மேலக்கண்டை கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகினறனர்.
மதுராந்தகம - கூவத்துார் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் மேலக்கண்டை பேருந்து நிறுத்தம் உள்ளது .
மேலக்கண்டை, அத்திவாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை போன்ற வெளியூர்களுக்கு செல்பவர்கள், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவியர் என தினசரி ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்ததால் பேருந்து நிறுத்த நிழற்குடை அகற்றப்பட்டது. விரிவாக்கப்பணி நிறைவடைந்தும் புதிய நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது.
இதனால் அப்பகுதியினர் சிரமமடைகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மேலக்கண்டையில் பேருந்து நிறுத்த நிழற்குடை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்கின்றனர்.