/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வல்மீகநாதர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல் வல்மீகநாதர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
வல்மீகநாதர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
வல்மீகநாதர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
வல்மீகநாதர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED : மே 26, 2025 11:53 PM

செய்யூர்,மாசடைந்துள்ள செய்யூர் வல்மீகநாதர் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்யூர் பஜார் பகுதியில், பழமையான முத்தாம்பிகை சமேத வல்மீகநாதர் கோவில் உள்ளது.
இக்கோவிலின் எதிரே, பழமை வாய்ந்த திருக்குளம் உள்ளது. பக்தர்கள் கோவிலில் வழிபடுவதற்கு முன், இந்த திருக்குளத்தில் நீராடிவிட்டு, சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.
முறையான பராமரிப்பு இல்லாமல், திருக்குளம் தற்போது மாசடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வல்மீகநாதர் கோவில் திருக்குளத்தை சீரமைத்து, மீண்டும் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.