Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பைக் மீது அரசு பஸ் மோதி தந்தை பலி; மகன் படுகாயம்

பைக் மீது அரசு பஸ் மோதி தந்தை பலி; மகன் படுகாயம்

பைக் மீது அரசு பஸ் மோதி தந்தை பலி; மகன் படுகாயம்

பைக் மீது அரசு பஸ் மோதி தந்தை பலி; மகன் படுகாயம்

ADDED : அக் 02, 2025 10:48 PM


Google News
மறைமலை நகர், மறைமலை நகரில், பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், தந்தை உயிரிழந்தார்; மகன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மறைமலை நகர் அடுத்த பேரமனுார் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரை, 64. மறைமலைநகரில் உள்ள ஒரு உணவகத்தில், காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, தன் மகன் முனியன், 37, என்பவருடன்,'ஹோண்டா ை ஷ ன்' பைக்கில் சென்றார்.

இரவு 10:30 மணியளவில், மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில், சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி வந்த அரசு சொகுசு பேருந்து, இவர்களது பைக் மீது மோதியது.

இதில், சக்கரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த முனியனை அங்கிருந்தோர் மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சக்கரை உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்கு பதிந்து, அரசு பேருந்து ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us