/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வருவாய் துறை சங்கங்கள் கூட்டமைப்பு செங்கையில் காத்திருப்பு போராட்டம் வருவாய் துறை சங்கங்கள் கூட்டமைப்பு செங்கையில் காத்திருப்பு போராட்டம்
வருவாய் துறை சங்கங்கள் கூட்டமைப்பு செங்கையில் காத்திருப்பு போராட்டம்
வருவாய் துறை சங்கங்கள் கூட்டமைப்பு செங்கையில் காத்திருப்பு போராட்டம்
வருவாய் துறை சங்கங்கள் கூட்டமைப்பு செங்கையில் காத்திருப்பு போராட்டம்
ADDED : செப் 26, 2025 03:22 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, காத்திருப்பு போராட்டம் நடந்தது.
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக பகுதியில் நேற்று, காத்திருப்பு போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு மாநில செயலர் பேபி, மாவட்ட தலைவர் லோகநாதன், தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க மாநில செயலர் விக்டர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
போராட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடி ஏற்படுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.