Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

ADDED : அக் 21, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
திருப்போரூர், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இந்தாண்டு மகா கந்த சஷ்டி வைபவம், இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, 28ம் தேதி, திருக்கல்யாண வைபவத்துடன் நிறைவடைகிறது. இதற்கிடையில், தினசரி கந்தசுவாமி வள்ளி, தெய்வானையாருடன் வீதியுலா வருகிறார்.

பிரதான சூரம்சம்ஹார விழா வரும் 27ல் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கோவில் ராஜ கோபுரம், வட்ட மண்டபம், சுற்றுச்சுவர், சரவணபொய்கை குளம், நீராழி மண்டபம், 16 கால் மண்டபம் என, வளாகம் முழுதும் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, இரவில் பிரமாண்டமாக ஜொலிக்கிறது.

கந்தசுவாமி கோவிலை ஒட்டி, சரவணபொய்கை குளம் அமைந்துள்ளது. 400 ஆண்டுகளாக வற்றாத நிலையில் உள்ள இந்த திருக்குளம், இப்பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது.

கோவிலை சுற்றியுள்ள வீடுகளில் கிணறு, போர்வெல் ஆகியவற்றுக்கு, நிலத்தடி நீர் மட்டத்தை குறையாமல் பார்த்துக் கொள்வதில், இந்த திருக்குளம் முக்கிய பங்காற்றுகிறது.

தற்போது பருவ மழை தொடர்ந்து பெய்வதால், திருப்போரூர் பிரணவ மலை பகுதி, மற்ற நிலப்பரப்பு பகுதியிலிருந்து, மழை நீர் குளத்திற்கு வருகிறது. இதனால், குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us