/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ உணவு டெலிவரி ஊழியர் வீடு புகுந்து அடித்து கொலை உணவு டெலிவரி ஊழியர் வீடு புகுந்து அடித்து கொலை
உணவு டெலிவரி ஊழியர் வீடு புகுந்து அடித்து கொலை
உணவு டெலிவரி ஊழியர் வீடு புகுந்து அடித்து கொலை
உணவு டெலிவரி ஊழியர் வீடு புகுந்து அடித்து கொலை
ADDED : செப் 23, 2025 01:13 AM

மறைமலை நகர்:அதிகாலையில் வீடு புகுந்து, உணவு டெலிவரி ஊழியர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் பாரதி கண்ணன், 26; இன்ஜினியரிங் பட்டதாரி. ஆறு மாதங்களாக சிங்கபெருமாள் கோவில் அடுத்த பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜன், 27, நவீன், 23, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பார்வதிநாதன், 22, வெங்கடேசன், 23, உட்பட ஐந்து பேர், இவருடன் தங்கி, ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை யில் பணிபுரிந்தனர்.
நேற்று முன்தினம் இரவு பாரதி கண்ணனும், ராஜனும், வீட்டின் வரவேற்பு அறையில் துாங்கினர். மற்ற மூவரும், படுக்கை அறையில் துாங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை 3:40 மணியளவில், இவர்களின் வீட்டில் புகுந்த மூன்று பேர் கும்பல், பாரதி கண்ணன் மற்றும் ராஜனை பீர் பாட்டில் மற்றும் கத்தி உள்ளிட்டவற்றால் தாக்கி, தப்பிச் சென்றனர்.
அலறல் சத்தம் கேட்டு படுக்கை அறையில் இருந்து வெளியே வந்த மற்ற மூவரும், '108' ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்ததில், பாரதி கண்ணன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது.
ராஜனை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.