/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ லாரியிலிருந்து சிதறும் ஜல்லி கற்கள் செய்யூர்-போளூர் சாலையில் அச்சம் லாரியிலிருந்து சிதறும் ஜல்லி கற்கள் செய்யூர்-போளூர் சாலையில் அச்சம்
லாரியிலிருந்து சிதறும் ஜல்லி கற்கள் செய்யூர்-போளூர் சாலையில் அச்சம்
லாரியிலிருந்து சிதறும் ஜல்லி கற்கள் செய்யூர்-போளூர் சாலையில் அச்சம்
லாரியிலிருந்து சிதறும் ஜல்லி கற்கள் செய்யூர்-போளூர் சாலையில் அச்சம்
ADDED : மே 25, 2025 01:55 AM

செய்யூர்:செய்யூர்-போளூர் சாலையில், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளில் இருந்து சிதறும் ஜல்லிகற்கள் சாலையில் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான சித்தாமூர், பவுஞ்சூர், ஜமீன் எண்டத்துார், ஓணம்பாக்கம், நெல்வாய்பாளையம், ஆக்கினாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், பல கல் குவாரிகள் செயல்படுகின்றன.
கல் குவாரிகளில் இருந்து லாரிகள் வாயிலாக, செய்யூர்-போளூர் சாலையில் ஜல்லி, எம்-சாண்ட், கருங்கற்கள் உள்ளிட்டவை கட்டுமானப் பணிகளுக்காக எடுத்துச் செல்லப்படுகின்றன.
இங்கிருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட, லாரிகள் வாயிலாக அதிக பாரம் ஏற்றிச்செல்லப்படுகிறது.
அப்போது, அந்த வாகனங்களின் அருகில் செல்லும் பிற வாகன ஓட்டிகள், பீதியுடன் செல்கின்றனர்.
லாரியில் எம்-சாண்ட் எடுத்துச் செல்லும் போது தார்ப்பாய் மூடாமல் செல்வதால், காற்றில் அது பறந்து, லாரிகளை பின்தொடர்ந்து செல்லும் பிற வாகன ஓட்டிகள் கண்களை பாதிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
லாரிகளில் இருந்து சிதறும் ஜல்லிகற்கள் சாலை ஓரத்தில் தேங்குவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளாகும் அபாய நிலை உள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.