/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/நல்லம்பாக்கம் வனப்பகுதி சாலை சீரமைப்புக்கு ரூ.6.90 கோடி 'டெண்டர்' விடும் பணியில் நெடுஞ்சாலை துறைநல்லம்பாக்கம் வனப்பகுதி சாலை சீரமைப்புக்கு ரூ.6.90 கோடி 'டெண்டர்' விடும் பணியில் நெடுஞ்சாலை துறை
நல்லம்பாக்கம் வனப்பகுதி சாலை சீரமைப்புக்கு ரூ.6.90 கோடி 'டெண்டர்' விடும் பணியில் நெடுஞ்சாலை துறை
நல்லம்பாக்கம் வனப்பகுதி சாலை சீரமைப்புக்கு ரூ.6.90 கோடி 'டெண்டர்' விடும் பணியில் நெடுஞ்சாலை துறை
நல்லம்பாக்கம் வனப்பகுதி சாலை சீரமைப்புக்கு ரூ.6.90 கோடி 'டெண்டர்' விடும் பணியில் நெடுஞ்சாலை துறை
ADDED : ஜன 28, 2024 04:21 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், நல்லம்பாக்கம் வனப்பகுதியில் குறுக்கிடும் சாலை, 20 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. இச்சசாலையை சீரமைக்க, 6.9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்க உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிரிந்து, ஊரப்பாக்கம், காட்டூர், காரணைபுதுச்சேரி, அருங்கால், குழுளி, கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் வரை நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், 2 கி.மீ., துாரம் நல்லம்பாக்கம் சாலை, வனத்துறை வழியாக செல்கிறது. நல்லம்பாக்கம் பகுதியில், மத்திய தார் சுடுகலவை இயந்திரம், ஜல்லி அரவை இயந்திரங்கள் என, தலா 100க்கும் மேற்பட்டவை உள்ளன.
ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை இயந்திரங்கள், 30க்கும் மேற்பட்டவை உள்ளன. இச்சாலை வழியாக கூடுவாஞ்சேரி, வண்டலுார், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் அத்தியாவசிய பணிக்காக இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தடத்தில், தாம்பரம் -- கீரப்பாக்கம் வரை, மாநகர போக்குவரத்து கழகம், தடம் எண்: 55 டி என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டது.
இங்கிருந்து, 1,000த்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், தார்ச்சாலை சேதமடைந்து, மேடு, பள்ளமாகி போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறியது.
மேலும், இந்த தடத்தில் இயங்கிய மாநகர பேருந்தான, தடம் எண்: 55 டி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. வனப்பகுதியில் சாலையை புதுப்பிக்க, வனத்துறை அனுமதி தராததால், நெடுஞ்சாலைத் துறையினர், சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளாக சீரழிந்த சாலை, கற்கள் பெயர்ந்து கரடுமுரடான அபாய பள்ளங்களுடன் காணப்படுகிறது. இதை தொடர்ந்து, சாலையை சீரமைக்க கோரி தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை, அப்பகுதியினர் நடத்தினர்.
இதன் எதிரொலியாக, இப்பகுதியில் சாலை அமைக்க, வனத்துறை அனுமதி வழங்க கலெக்டர் ராகுல்நாத் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
இதையேற்று, சாலை அமைக்கும் பணிக்கு, வனத்துறை அனுமதி அளித்து நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டது. அதன்பின், நல்லம்பாக்கம் 2 கி.மீ., சாலை அமைக்க, 6 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது.
இதன் வாயிலாக, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளது. இப்பணிக்கு, 'டெண்டர்' விடும் பணி நடைபெற்று வருவதாக, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.