/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பம்மலில் பாதாள சாக்கடை பணி வீடு வீடாக சென்று குறை கேட்பு பம்மலில் பாதாள சாக்கடை பணி வீடு வீடாக சென்று குறை கேட்பு
பம்மலில் பாதாள சாக்கடை பணி வீடு வீடாக சென்று குறை கேட்பு
பம்மலில் பாதாள சாக்கடை பணி வீடு வீடாக சென்று குறை கேட்பு
பம்மலில் பாதாள சாக்கடை பணி வீடு வீடாக சென்று குறை கேட்பு
ADDED : செப் 25, 2025 01:24 AM
பம்மல்:தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம், பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில், 211 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், அனகாபுத்துார் பகுதியில், பணிகள் முடிந்து வீட்டு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. பம்மலில், 80 சதவீத பணிகள் முடிந்து விட்டன. எஞ்சிய பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், 11வது வார்டுக்கு உட்பட்ட ராஜிவ்காந்தி நகர், சபாபதி நகர், காந்தி நகர், ராமநாதன் தெரு, துரைராஜ் தெரு உள்ளிட்ட பகுதிகளில், மண்டல குழு தலைவர் கருணாநிதி மற்றும் அதிகாரிகள், நேற்று வீடு வீடாக சென்று குறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது, குடிநீர் எப்படி வருகிறது, தெருக்கள்தோறும் விளக்குகள் எரிகிறதா, சரியான முறையில் குப்பை அகற்றப்படுகிறதா, வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
அப்போது, பொதுமக்கள் தெரிவித்த குறைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.