/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட் இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்
இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்
இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்
இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்
ADDED : செப் 24, 2025 03:25 AM

செய்யூர்:வீட்டுமனைக்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்ட, இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலராக மகேஸ்வரன் பணிபுரிந்து வந்தார். கடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், வீட்டுமனைக்கு அனுமதி வழங்க, பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார். இதுகுறித்து செயல் அலுவலர் மகேஸ்வனிடம் கேட்டபோது, அனுமதி வழங்க 4 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு பேரம் பேசியுள்ளார்.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இதுகுறித்து விசாரித்த பேரூராட்சி ஆணையரகம், மகேஸ்வரனை சஸ்பெண்ட் செய்து உத்தவிட்டுள்ளது.