/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கையில் கட்டப்பட்ட சுற்றுலா மாளிகை திறப்புசெங்கையில் கட்டப்பட்ட சுற்றுலா மாளிகை திறப்பு
செங்கையில் கட்டப்பட்ட சுற்றுலா மாளிகை திறப்பு
செங்கையில் கட்டப்பட்ட சுற்றுலா மாளிகை திறப்பு
செங்கையில் கட்டப்பட்ட சுற்றுலா மாளிகை திறப்பு
ADDED : பிப் 29, 2024 09:09 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில், சுற்றுலா மாளிகை கட்டடம், 6.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட, 2022ம் ஆண்டு, செப்., 25ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்பின், டெண்டர் விடப்பட்டு, 5.22 கோடி ரூபாயில் கட்டடப்பணி துவங்கி, சில தினங்களுக்கு முன் அனைத்து பணிகளும் நிறைவடைந்தன. கட்டடத்தின் பரப்பளவு, தரைதளம், முதல் தளம் என, தலா 6,133 சதுர அடியில் அமைந்துள்ளது.
இங்கு, தரை தளத்தில் ஆறு அறைகள் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் தளத்தில், முதல்வர் உள்ளிட்டோர் தங்குவதற்கான மூன்று அறைகள், முக்கிய பிரமுகர்களின் செயலர்கள் தங்கும் அறை, கூட்ட அரங்கம் ஆகியவை உள்ளன.
மின் துாக்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ள சுற்றுலா மாளிகை திறப்பு விழா, அமைச்சர் அன்பரசன் தலைமையில்,நேற்று முன்தினம் நடந்தது.
கலெக்டர் அருண்ராஜ், காஞ்சிபுரம் தி.மு.க., - - எம்.பி.,செல்வம், செங்கல்பட்டு தி.மு.க., -- எம்.எல்.ஏ., வரலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு, சுற்றுலா மாளிகையை திறந்து வைத்தார்.
முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, தலைமைப் பொறியாளர் ஆயிரத்தரசு ராசசேகரன், நகரசபை தலைவர் தேன்மொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


