/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 'டி - 20' சென்னை ஜேப்பியார் 'சாம்பியன்'ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 'டி - 20' சென்னை ஜேப்பியார் 'சாம்பியன்'
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 'டி - 20' சென்னை ஜேப்பியார் 'சாம்பியன்'
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 'டி - 20' சென்னை ஜேப்பியார் 'சாம்பியன்'
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 'டி - 20' சென்னை ஜேப்பியார் 'சாம்பியன்'
ADDED : ஜன 28, 2024 04:13 AM

சென்னை: சூப்பர் கிங்ஸ் அகாடமியின், தமிழக பள்ளிகளுக்கு இடையிலான 'டி - 20' கிரிக்கெட் போட்டி, டிச., 26ல் துவங்கி, நேற்று முன்தினம் இரவு, திருநெல்வேலியில் நிறைவடைந்தது.
பெங்களூரு, ஆந்திரா, கோவா உட்பட தமிழகத்தின் 18 மாவட்டகளில் இருந்து, 101 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் தொடர்ந்து, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடந்தன.
இதில், சென்னை மாவட்ட பள்ளியில், சென்னை ஜேப்பியார் பள்ளி முதலிடத்தை பிடித்து, மற்ற மாவட்டங்களில் வெற்றி பெற்ற அணிகளுடன் மோதியது.
அனைத்து மாவட்ட போட்டிகள் முடிவில், சென்னை ஜேப்பியார் மற்றும் கோவை ராமகிருஷ்ண பள்ளிகள், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று முன்தினம், நெல்லையில் நடந்த இறுதிப் போட்டியில், முதலில் பேட் செய்த ஜேப்பியார் அணி 17.1 ஓவர்களில் ஆல் ஆவுட் ஆகி, 137 ரன்களை அடித்தது.
அடுத்து பேட் செய்த ராமகிருஷ்ணா அணி, 20 ஓவர்கள் போராடி, வெற்றிக்கு அருகில், ஒன்பது விக்கெட் இழப்பு 136 ரன்களை அடித்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சென்னை ஜேப்பியார் அணி, கோப்பையை வென்றது.
போட்டியில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருது, ஜேப்பியார் பள்ளியின் சீனிவாசன், சிறந்த பேட்டர், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த வீரர் என முறையே ராமகிருஷ்ணா பள்ளியின் சாய் சித்தார்த், கார்த்திக் ராகுல், பிரசன்னா ஆகியோருக்கு வழங்கப்பட்டன.