/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கல்பட்டு ஊராட்சி அலுவலகம் புதிய கட்டடம் கட்டப்படுமா?கல்பட்டு ஊராட்சி அலுவலகம் புதிய கட்டடம் கட்டப்படுமா?
கல்பட்டு ஊராட்சி அலுவலகம் புதிய கட்டடம் கட்டப்படுமா?
கல்பட்டு ஊராட்சி அலுவலகம் புதிய கட்டடம் கட்டப்படுமா?
கல்பட்டு ஊராட்சி அலுவலகம் புதிய கட்டடம் கட்டப்படுமா?
ADDED : பிப் 12, 2024 12:37 AM
சூணாம்பேடு : சூணாம்பேடு அருகே கல்பட்டு மற்றும் பனையடிவாக்கம் கிராமங்களை உள்ளடக்கிய கல்பட்டு ஊராட்சி உள்ளது. இங்கு, 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
ஊராட்சி அலுவலக கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பராமரிப்பு இல்லாததால், தற்போது முற்றிலும் சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அவல நிலையில் உள்ளது.
ஆகையால், தற்போது ஊராட்சி அலுவலகம் இ - சேவை மைய கட்டடத்தில் செயல்படுகிறது. ஊராட்சி கூட்டங்கள் நடத்தவும், கோப்புகளை பராமரிக்கவும், அதிகாரிகள் போதிய இடவசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
புதிய ஊராட்சி அலுவலகம் அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய ஊராட்சி கட்டடத்தை அகற்றி, அதே இடத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.