ADDED : செப் 26, 2025 03:06 AM
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, பல்வேறு இடங்களில் 600 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இதில், திருப்போரூரில் உள்ள 75.85 ஏக்கர், காலவாக்கம் கிராமத்தில் 10.17 ஏக்கர், தண்டலம் கிராமத்தில் 43.32 ஏக்கர் விவசாய நிலங்களை குத்தகைக்கு ஏலம் விட முடிவு செய்யப்பட்டது.
கோவில் செயல் அலுவலர் குமரவேல், ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில், திருப்போரூர் கிராமத்தில் உள்ள 75.85 ஏக்கர் நிலங்கள், நேற்று ஏலத்திற்கு விடப்பட்டன.
இந்த ஏலத்தில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, ஓராண்டுக்கு விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்தனர்.
மற்றொருபுறம், கோவில் நிலங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், ஏலம் விடக் கூடாது.
முறையான அறிவிப்பு இல்லை என்று கூறி எதிர்ப்பும் எழுந்தது.
ஆனாலும், கோவில் நிலத்திற்கான ஏலம் நடத்தி முடிக்கப்பட்டது.