/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு
மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு
மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு
மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு
ADDED : மே 16, 2025 09:38 PM
மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையபெருமாள்,52; பிளம்பர்.
திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில், தன் வீட்டின் மாடியில் அமர்ந்து மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார்.
ஆனால், தனக்கு காயம் ஏதும் இல்லை எனக் கூறி, அனைவரிடமும் நன்றாக பேசியுள்ளார்.
இரவு 2:30 மணியளவில், இளையபெருமாள் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.