Dinamalar-Logo
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மேம்பால இறக்கத்தில் எம்.ஜி.ஆர்., சிலை மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மேம்பால இறக்கத்தில் எம்.ஜி.ஆர்., சிலை மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மேம்பால இறக்கத்தில் எம்.ஜி.ஆர்., சிலை மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மேம்பால இறக்கத்தில் எம்.ஜி.ஆர்., சிலை மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

ADDED : மே 26, 2025 12:29 AM

Google News
Latest Tamil News
சிங்கபெருமாள் கோவில்:செங்கல்பட்டு புறநகரில், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளுக்குச் சென்று வருகின்றன.

இந்த பகுதியில் உள்ள ரயில்வே 'கேட்' அடிக்கடி மூடப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, இப்பகுதிவாசிகளின் கோரிக்கையை ஏற்று, 2008ம் ஆண்டு மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு, ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.

இதன் பின், 2021ம் ஆண்டு நவம்பரில் மீண்டும் பணி துவக்கப்பட்டு, ஒரகடம் பகுதியில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் வகையில், ஒரு பக்கம் மட்டும் மேம்பாலம், கடந்த பிப்ரவரியில் திறக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி., சாலையில், தாம்பரம் மார்க்கத்தில் இருந்து ஒரகடம் மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல ரவுண்டானாவும், செங்கல்பட்டு மார்க்கத்திலும் பணிகள் வேகமாக நடைபெற்று, தற்போது நிறைவடைந்து உள்ளன.

இதில், செங்கல்பட்டு மார்க்கத்தில் மேம்பாலம் இறங்கும் பகுதியில், அகலப்படுத்தப்பட்ட சாலையின் நடுவே, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலை உள்ளது.இந்த சிலையை மாற்றியமைக்காமல் அல்லது சிலையைச் சுற்றி தடுப்புகள் அமைக்காமல் மேம்பாலம் திறக்கப்பட்டால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, இந்த சிலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலையை மாற்றியமைக்க வேண்டும் என, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க.,வினரிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். மேம்பாலம் இந்த மாத இறுதியில் திறக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலெக்டரிடம் மனு

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலையை மாற்றியமைக்க வேண்டும் என, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க.,வினரிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். மேம்பாலம் இந்த மாத இறுதியில் திறக்கப்படும்.

- நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்

      Our Apps Available On

      Dinamalar

      Follow us