/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ புது ரேஷன் கடை பயன்பாட்டிற்கு திறப்பு புது ரேஷன் கடை பயன்பாட்டிற்கு திறப்பு
புது ரேஷன் கடை பயன்பாட்டிற்கு திறப்பு
புது ரேஷன் கடை பயன்பாட்டிற்கு திறப்பு
புது ரேஷன் கடை பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : மார் 16, 2025 08:59 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம், பழைய மாமல்லபுரம் சாலை பகுதியில் உள்ள பவழக்காரன்சத்திரத்தில் ரேஷன் கடை இல்லாததால், இப்பகுதியினர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க, பூஞ்சேரியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று சிரமப்பட்டனர்.
இதனால், தங்கள் பகுதியில் ரேஷன் கடை துவக்க வலியுறுத்தினர். இதையடுத்து, ஓராண்டிற்கு முன், அப்பகுதி வீட்டில் பகுதிநேர ரேஷன் கடை துவக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, இக்கடைக்கு தனி இடம் ஒதுக்கவும், கட்டடம் கட்டவும் வலியுறுத்தப்பட்டது.
திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, தொகுதி மேம்பாட்டு நிதியில், 9.13 லட்சம் ரூபாய் ஒதுக்கி, சில மாதங்களுக்கு முன், கட்டடம் கட்டப்பட்டது. தற்போது பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு உள்ளது.