Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வடகிழக்கு பருவமழை தாக்கம் சுற்றுலா, மீன்பிடி பாதிப்பு

வடகிழக்கு பருவமழை தாக்கம் சுற்றுலா, மீன்பிடி பாதிப்பு

வடகிழக்கு பருவமழை தாக்கம் சுற்றுலா, மீன்பிடி பாதிப்பு

வடகிழக்கு பருவமழை தாக்கம் சுற்றுலா, மீன்பிடி பாதிப்பு

ADDED : அக் 21, 2025 11:29 PM


Google News
மாமல்லபுரம்: கன மழையால் மாமல்லபுரத்தில் சுற்றுலா, மீனவ பகுதிகளில் மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் பல்லவர் கால சிற்பங்கள் உள்ளன. இந்திய, சர்வதேச பயணியர், அவற்றை கண்டு ரசிக்கின்றனர். சென்னை பகுதியினர், வார இறுதி, அரசு விடுமுறை, பண்டிகை ஆகிய நாட்களில், இங்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை விடுமுறை, அதை கொண்டாட, சொந்த ஊர் சென்றவர்கள், சென்னை திரும்புவதற்காக நேற்று விடுமுறை , அதற்கு முன் இரண்டு நாட்கள் வாரவிடுமுறை என, தொடர் விடுமுறையாக இருந்தது.

இத்தகைய விடுமுறை எனில், இங்கு பயணியர் குவிவர்.

தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், சில நாட்களாக கன மழை பெய்கிறது. இதன் காரணமாக, பயணியர் வருகை குறைந்து, சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி பாதிப்பு செங்கல்பட்டு மாவட்டத்தில், கானத்துார் ரெட்டிகுப்பம் துவங்கி, ஆலம்பரைகுப்பம் வரை, 36 மீனவ பகுதிகள் உள்ளன. மீனவர்கள் வாழ்வாதார தொழிலாக, கடலில் மீன் பிடிக்கின்றனர்.

வங்க கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாகவும் மாற்றமடைய உள்ளதால், கனமழை தீவிரமடைந்து உள்ளது.

கடலில் அலைகள் உயரமாக எழும்பி கொந்தளிப்பாக உள்ளது. எனவே, மீன்வளத் துறையினர் வாய்மொழியாக உத்தரவிட்டு, கடலில் மீன்பிடிக்க செல்லாமல் தவிர்த்துள்ளதாக, மீனவர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us