Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கல்பட்டில் வரும் 16ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டில் வரும் 16ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டில் வரும் 16ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டில் வரும் 16ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ADDED : மே 13, 2025 08:51 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 16ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், கலெக்டர் அலுவலக வளாகத்தில், வரும் 16ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடக்கிறது.

இந்த முகாமில், மகேந்திரா சிட்டியில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தினர், 1,000 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும் 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 5,000 பணியிடங்களை நிரப்ப, நேர்முகத் தேர்வு நடத்த உள்ளன.

முகாமில் பங்கேற்க www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம். இதில் எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு பி.இ., - ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா, செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர் போன்ற கல்வித்தகுதி உடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறலாம்.

மேலும், விபரங்களுக்கு, 044- 2742 6020, 94868 70577 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us