/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கஞ்சா விற்பனை செய்த இருவருக்கு காப்புகஞ்சா விற்பனை செய்த இருவருக்கு காப்பு
கஞ்சா விற்பனை செய்த இருவருக்கு காப்பு
கஞ்சா விற்பனை செய்த இருவருக்கு காப்பு
கஞ்சா விற்பனை செய்த இருவருக்கு காப்பு
ADDED : பிப் 01, 2024 10:52 PM

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - - கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் ஊரப்பாக்கம் பகுதிகளில், வெளி மாநிலத்தை சேர்ந்த நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில், போலீசார் நடத்திய வாகன சோதனையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கொர் பீமேஸ்வர ராவ், 35, முத்துராஜு ரமணா, 43, ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, புறநகர் பகுதிகளில் விற்பனை செய்வது தெரிய வந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


